மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறையில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை கோவிலில் கிடா வெட்டி கொண்டாடிய த.வெ.க வினர்

மாம்பாறை-தமிழக முதல்வர் 52 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முனியப்பசாமி கோவிலில் கிடா வெட்டி அன்னதானம் வழங்கிய த.வெ.க வினர்

           திண்டுக்கல் மாவட்டம் த.வெ.க மத்திய மாவட்ட செயலாளர் எம்.எல்.வாசுதேவன் அவர்கள் தலைமையில் ஆத்தூர் தவெக வடக்கு ஒன்றியம் செயலாளர் லலித்குமார் முன்னிலையில் , வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் அழகர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 52ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாம்பாறை முனியப்ப சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

              இந்நிகழ்வில் உடன் ஒன்றிய இணைச் செயலாளர் ராகுல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் மதன், நவநீதகிருஷ்ணன், பாண்டியன், சூர்யா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, 

        முதல்வர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்றிட பிரார்த்தனை செய்தனர். பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

            நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள், மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும்கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.