தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 – ஆம் ஆண்டிற்கான பொறியியல் / பொறியியல் அல்லாத தொழிற்பிரிவு மற்றும் 4.0 நவீன தொழிற்நுட்பப் பயிற்சி ஆகிய சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடர்புகொண்டு, விண்ணப்பக்கட்டணத் தொகையாக ரூ.50/- (Debit Card / Credit Card / Net banking / UPI(Gpay, PhonePe, etc. ) செலுத்தி நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- தேனி prlgititheni@gmail.com / 9499055765, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் - போடி govtbodiiti@gmail.com / 9499055768, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டிப்பட்டி ( மகளிர்) gitiwapt@gmail.com / 9499055770 ஆகிய மின்னஞ்சல் முகவரி / அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்
செய்தி: ஆசிரியர் .
கருத்துகள் (0)
Be the first to comment on this article.