மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

சிறந்த நடைமுறைக்கான விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

            தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவலிட் படி அரசின் திட்டங்களையும் சேவைகளையும் பொதுமக்களிடம் முறையாக சென்றடைவதிலும், மற்றவர்களுக்கு வழிகாட்டும் உத்திகள், புதிய முன்னெடுப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய அலுவலர் / அமைப்பு/ நிறுவனத்திற்கு 2026-ஆம் ஆண்டிற்கு முதலமைச்சரால் சுதந்திர தினத்தன்று “சிறந்த நடைமுறைக்கான விருது” வழங்கப்பட உள்ளது.

          இவ்விருது பெறும் அலுவலர்/அமைப்பு/நிறுவனத்திற்கு தலா ரூ.2 இலட்சம் (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்) பரிசு வழங்கப்படும். இவ்விருது பெற http://awards.tn.gov.in என்ற விருதுகள் இணையதளத்தில் 30.06.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

            மேலும், தங்களது கருத்துருவினை 2 நகல்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 30.06.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண். 67, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியரக வளாகம், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரில் சென்று தெரிந்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.