முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக தாடிக்கொம்பில் இன்று நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாடிக்கொம்பில் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விஜயன் ஏற்பாட்டில் , ரெட்டியார் சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ கருப்பன், தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் அம்பேத் ராஜா மற்றும் அகரம் பேரூர் செயலாளர் சங்கீத்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதன் முதலில் தாடிக்கொம்பு பேரூராட்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.