திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் அக்கப்போர் இயக்கம் சார்பாக நிரந்தர பதிவாளரை நியமனம் செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது
வடமதுரையில் பத்திரப்பதிவு செய்ய வரும் பயனாளிகள் ஊழியர்கள் பற்றாக்குறையாலும் குறித்த நேரத்திற்கு பணிக்கு ஊழியர்கள் வராத காரணத்தினாலும் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த பதிவு அலுவலகத்தில் ஊழியர்கள் குறித்த நேரத்தில் வருவதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். #தகவலின் பெயரில் வடமதுரை காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த வடமதுரை காவல் நிலைய காவல் ஆய்வாளரும் மாவட்ட பதிவாளர் சசிகலாவும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து வடமதுரை பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பத்திரம் பதிவு செய்ய வந்திருந்த பயனாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிய கூடிய சார்பதிவாளர்களுக்கு குறிப்பிட்ட சில பத்திர எழுத்தர்களால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவதால் இங்கு பணியில் அமரக்கூடிய அலுவலர்கள் சில மாதங்களிலேயே தலை தெரிக்க ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பத்தர எழுத்தர்கள்.
கடந்தசில வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த சார்பதிவாளர் பத்திர எழுத்தர்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து இறந்த வரலாறும் வடமதுரை சார்பு பதிவாளர் அலுவலகத்திற்கு உண்டு.
அக்கப் போர் இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட பதிவு எண்ணை குறிப்பிடாமல் இந்த இயக்கத்தின் பெயரில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை பொதுமக்களிடையே பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. #பொது மக்களுக்காக போராடக்கூடிய அக்கப்போர் இயக்கமானது பதிவு எண்ணைக் குறிப்பிடாமல் விளம்பரப் பலகை வைத்தது ஏன் என சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.