கணவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சென்ராயன் என்பவரை கொலை செய்த வழக்கில் இறந்த சென்றாயனின் மனைவி வனிதா(40) என்பவரை நிலக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அறிவுறுத்தலின் படி நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சத்யா, நீதிமன்ற தலைமை காவலர் ராஜலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆகியோரின் சீரிய முயற்சியால் (16.06.2026) இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் இக்கொலை வழக்கின் குற்றவாளியான வனிதா என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.