திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் நகர் DSP. கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது
R.S.ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வையம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராஜ்குமார்(27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.