திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் த.வெ.க இளைஞரணி சார்பில் எனது கிராமம் தூய்மையான கிராமம் என்ற வாக்கின்படி கே. புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் குப்பை கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்றது
திண்டுக்கல் மத்திய மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக இளைஞரணி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எனது கிராமம் தூய்மையான கிராமம் என்ற வாக்கின்படி கே. புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பேணிக் காக்கும் வகையில் ரெட்டியார் சத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் குகன் (எ) குகனேஷ் குமார் தலைமையில் பள்ளிக்கூடம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் ஜே.சி.பி. வாகனம் மூலம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டது.
மேலும் பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் தினத்தை அவசியத்தை வலியுறுத்தி அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.