மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் வைகை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்டத்தில் வைகை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

#       தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் செய்ய சாய்வு தளம் வீல் சேர் கைவிடக் கம்பிகள் செய்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் வைகை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக செயலாளர் சுரேஷ் கோரிக்கை மனு வழங்கினார்

        இந்த மனுவில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறோம்.(21 வகையான) இதில் தவழும் மாற்றுத்திறனாளிகள் கூடுதலாக உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களான அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில், வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயிலில் மட்டும் முன்னாள் ஆட்சித்தலைவர் முரளிதரன் அவர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று, நிரந்தரமாக சாய்தளம் சிறப்பு வழி அமைத்துக் கொடுத்துள்ளார். 

       தற்போது கம்பம் அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில், அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் (கம்பம்), உத்தமபாளையம் அருள்மிகு ஞானாம்பிக்கை திருக்கோயில், சின்னமனூர் அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில், அருள்மிகு லட்சுமி நாராயணன் திருக்கோயில் ஆகியகோயில்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வர எவ்வித அடிப்படை வசதியும் இல்லை

         இந்த கோயில்களுக்குள் சென்று நாங்கள் சுவாமி தரிசனம் செய்ய சாய்தளம் வசதி, வீல்சேர் வசதி கைபிடிக் கம்பிகள் என எந்தவித வசதியும் செய்து கொடுக்கவில்லை. 

       இது தொடர்பாக இணை இயக்குநர் அவர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கம்பம் அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயிலில் கிழக்கு, மேற்கு என இரண்டு வாயில்கள் உள்ளது, இந்த வாசல் கதவு அடைத்து மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. நடப்பதற்கு மட்டும் ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது ,எங்களால் கதவுகளை தாண்டி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.

         திருக்கோயில் செயல் அலுவலர் மாற்றுத்திறனாளிகள் கோயிலும் சுவாமி தரிசனம் செய்ய போதிய வசதிகளை செய்து கதவுகளை திறந்து எழிய முறையில் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

         இதனை தொடர்ந்து மற்றொறு மனுவில் 

         வைகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கம்பத்தில் இயங்கி வருகிறது. தங்காது உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று மனு கொடுக்கவோ கோரிக்கை வைக்கவோ போதிய வசதி செய்து தர வேண்டும் என்றும், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயநாத்மிஸ்ரா அவர்களை சந்திக்க அவரது அலுவலகம் சென்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளிக்கும் வகையில் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும்வங்கம் சார்பாக செயலாளர் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 செய்தி: ஆசிரியர்/ புகைபடம் - பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.