திண்டுக்கல் மாவட்டம் - காவல் துறையினரை கண்டித்து தூய்மைப்பணியாளர் தர்னா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள இந்திராநகரில், பெண் தூய்மை பணியாளரை கொடூரமாக தாக்கிய குண்டர்களை 15-நாட்களாகியும் கைது செய்யாத அம்மையநாயக்கனூர் காவல் துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தூய்மைப்பணியாளர் தர்னா போராட்டம் நடத்தினார்.
மேலும் ஊரில் நடக்கும் திருவிழாவில் தங்களிடம் வரி வாங்காமல் ஒதுக்கிவைப்பதாகவும், கைக்குழந்தையுடன் வசிக்கும் தங்களுக்கு தொடர்ந்து அக்கும்பல் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.