மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதியில் நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி விடுதியில் நேரில் ஆய்வு

         திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் தேவைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

        தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அவர்களிடமிருந்து குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் விடுதிகளில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டு தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

         இந்த நிகழ்ச்சியின் போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் ஸ்ரீசரவணன், துணை முதல்வர் சலீம், துணை நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமரன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர் உட்பட பலர் உடனிருந்தனர். 

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.