மாவட்ட செய்திகள்

தேனி பி. சி. பட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டிட விவகாரம் அதிகாரிகள் பேச்சுவார்தை

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாக பிரச்சினை இருப்பதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

          தேனி பழனிசெட்டிபட்டி பெனடிக்ட் மிஷன்     அறக்கட்டளையின் கீழ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக செல்வமனோகரன் இருந்து வருகிறார். 

        கடந்த 17.3.2021 அன்று மதுரை சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டி நிர்வாக இயக்குனர் தனியார் பள்ளி கல்வித்துறையின் அனுமதி இன்றி பதிவு செய்யப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, சில நிபந்தனைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

        பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை தீர்மானத்தின் படி சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அலுவலக உத்தரவின் படி மதுரை சிஇஓஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

        பள்ளியின் தாளாளராக இருந்து வந்த பாக்கியநாதன் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் கடந்த 26.3.2025 அன்று அவரை தாளாளர் பொறுப்பில் இருந்து நீக்கியும் பதிவு செய்யப்படாத புரிந்துணர்வ ஒப்பந்தத்தை பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் செயலாளர் செல்வமனோகரன் ரத்து செய்துவிட்டார்.

        இதற்கிடையே கல்வித்துறை ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் மதுரை சிஇஓஏ பெயரில் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் உறுப்பினர்களாக செல்வ மனோகரன் மற்றும் அவர குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். ஆனால் மதுரை சேர்ந்த சிஇஓஏ எஜிகேஷனல் சொசைட்டி என்ற பெயரில் உள்ள சங்க உறுப்பினர்கள் எவரும் இல்லை. அதுபோல பள்ளியின் நிலம், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் குத்தகை அனைத்தும் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.

         இந்நிலையில் பள்ளியின் தொடர் அங்கீகாரம் கடந்த 31.5.2024 அன்றே முடிவடைந்த நிலையில் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. பதிவு செய்யப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் வருகின்ற 2033 வரை பள்ளியானது எங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக மதுரையை சேர்ந்த சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டி தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் பள்ளி செயல்படுவதற்கான ஆவணங்கள் எதுவும் அவரால் தாக்கல் செய்யப்படவில்லை.

          அதுபோல பள்ளியில் முதல்வர் பொறுப்பில் யார் உள்ளனர் என்ற விவரமும் தெளிவாக இல்லை. வாரம் ஒருவர் பள்ளி முதல்வர் எனக் கூறி வருகிறார். இந்த பள்ளியில் சுமார் 500 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பெனடிக்ட் மிஷின் அறக்கட்டளையின் தலைவர் செல்வ மனோகரன் பள்ளியின் தாளாளராக செயல்பட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதிகள் 2023-ன் படி பழனிசெட்டிபட்டி பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் பள்ளி செயல்பட ஆவண செய்யுமாறு பள்ளி கல்வித்தறையின் (தனியார் பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள பரிந்துரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

         இந்த பள்ளி தற்போது பள்ளிக்கான அங்கீகாரம் வாய்கிங்கிய கட்டிடத்தில் செயல்பட வில்லை என்றும் இதற்க்கு மாறாக திலகா டெரன்சிக்கு சொந்தமான தெற்கு பகுதியில் உள்ள நீதிமன்ற நிரந்தர தடை உத்தரவு பெற்ற கட்டிடத்தில் நடத்துபதாக கூறப்படுகிறது. 

 இதனை தொடர்ந்து பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை செயலாளர் செல்வ மனோகரன் தரப்பினர், தற்போது பள்ளி செயல்பட திட்டமிடப்பட்டிருந்த கட்டிடத்திற்கான இடத்தை சேர்ந்த திலகாடெரன்சி, மதுரையை சேர்ந்த சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டியால் பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ள நிர்வாகிகள் ஆகிய இருதரப்பினர் இடையே மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். @இதன் அடிப்படையில் பள்ளி நடத்த அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று திலகாடெரன்சி கூறியதாக கூறப்படுகிறது.

        இந்த பேச்சுவார்த்தையில் செல்வ மனோகரன் தரப்பில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்கத்தின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் எம்.கே.எம். முத்துராமலிங்கம், தற்போதைய பள்ளி நிர்வாக முதல்வர், அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

      இதற்கிடையே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கராஜா தலைமையில் கட்சியினர் அங்கீகாரம் இல்லாத இடத்தில் பள்ளி செயல்படுவதை கண்டித்து பள்ளி நுழைவாயில்முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.