வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் காத்திருந்தும் மருத்துவர் வராததால் கர்ப்பிணி பெண்கள் கடும் அவதி..தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தோறும் மகப்பேறு சிறப்பு மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்வது மற்றும் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சையில் ஈடுபடுவது வழக்கம்
இந்நிலையில் இன்று காலை பரிசோதனை சிகிச்சை மேற்கொள்ள 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் காத்திருந்தனர் @ஆனால் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரவேண்டிய மகப்பேறு மருத்துவர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது
கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் சோர்ந்து காணப்பட்ட கர்பிணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களை பரிசுதனை செய்ய மருத்துவர்கள் வராததால் மன உளைச்சலுக்கு ஆளாகினர் இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது
இதனைத் தொடர்ந்து பேசிய கர்ப்பிணிகள் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், திடீரென பிரசவ வலி ஏற்பட்டால் தாங்கள் எங்கு செல்வது எனவும் கேள்வி எழுப்பினர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.