மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணம் பெற்ற புகாரில் காவல் துறையினர் இருவர் தற்காலிகப் பணி இடைநீக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் விபத்து வழக்கில் பணம் பெற்ற புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் முதன்மைக் காவலர் ஆகிய இருவரைத் தற்காலிகப் பணி இடைநீக்கம்

         பழனி அருகே சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் விபத்து வழக்கில் பணம் பெற்ற புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் பெண் முதன்மைக் காவலர் ஆகிய இருவரைத் தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்தும், தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மற்றொரு முதல் நிலை காவலரைப் பணியில் இருந்து நீக்கியும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.

        திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் மீது பல்வேறு புகார்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற வண்ணம் இருந்தாக கூறப்பட்ட நிலையில், சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் பதிவான விபத்து வழக்கு ஒன்றில், உரிய நடவடிக்கை எடுக்காமல் சாதகமாகச் செயல்படப் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

           இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விபத்து வழக்கில் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாமிநாதபுரம் காவல் நிலைய சிறப்புச் சார்பு ஆய்வாளர் (SSI) ராஜு மற்றும் பெண் முதன்மைக் காவலரான சுதா ராணி ஆகிய இருவரையும் தற்காலிகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.

        அதேபோல், இதே காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர், துறையின் விதிகளுக்கு முரணாகத் தொடர்ந்து பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாததால், காவலர் மணிகண்டனைப் பணி நீக்கம் (Removed from service) செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.