மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் - வாழ்வை இழந்து வாழ வழியில்லை என இரண்டு குழந்தைகளுடன் தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தேனி மாவட்ட திமுக பிரமுகர் மீது மனைவி புகார்

        தேனி மாவட்டம் நாகலாபுரம் ராஜசேதுபதி மனைவி ஜெயவீர தேவி என்ற பெண் 01.06.2026 இன்று தேனிமாவட்ட ஆட்சியரிடம் புகார் மறு அளித்துள்ளார்.

        அந்த மனுவில் செல்வம்-கார்த்திகைலட்சுமி மகளான எனக்கும், நாகலாபுரம் கிராமத்திலிருக்கும் கருப்பசாமி-வேல்தாய் லேட் இவர்களது மகன் ராஜாசேது பதிக்கும் இந்து முறைப்படி பெரியோர்கள் முன்னிலையில் கடந்த 29.8.2014 ஆம்தேதி அன்று திருமணம் நடைபெற்றது.

       எங்களுக்கு பிரணவ் வயது 9, ஹர்ஷன் வயது 6, ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளது. நல்லமுறையில் வாழ்ந்து வந்த எனது குடும்பத்தில் எனது கணவரின் தகப்பனாரான எனது மானார் கருப்பசாமி தூண்டுதல் பேரில் எனது கணவர் என்னிடம் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி சண்டையிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்து வீட்டிற்கு தேவையான எதுவும் வாங்கிகொடுக்காமல் என்னை வேலைக்கும் செல்லவிடாமல் சாப்பாட்டுக்குகூட எதுவும் கொடுக்காமல் நானும் எனது இரண்டு பிள்ளைகளும் தினமும் பட்டினியால் செய்வதறியாமல் தவித்து வருகிறோம்.

          என் வீட்டில் எனக்கு சீதனமாக போடப்பட்ட 30 பவுன் தங்க நகைகளையும் என்னிடமிருந்து வாங்கிச்சென்று வங்கியில் அடகுவைத்து அந்த பணத்தை என்ன செய்தார் என்றே தெரியவில்லை, கேட்டால் இதை கேட்கவே கூடாது நகையை கேட்டால் அடித்து கொன்று புதைத்துவிடுவேன என்று கொலை மிரட்டல் விடுகிறார். இது சம்பந்தமாக காவல்துறையிலும், சமூகநலத் துறையிலும் புகார் கொடுத்தேன். எனது கணவர் திமுகவில் பொறுப்பில் உள்ளதால் தனக்குள்ள அரசியல் செல்வாக்காலும், ஆள்பலம், பணபலத்தை வைத்து எனக்கு நீதி கிடைக்கவிடாமல் விசாரணைைய முடக்கி விடுகிறார். 

         உண்மைக்கு புறம்பான வகையில் பேசி சாமர்த்தியமாக சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்துக்கொண்டு என்னையும் எனது இரண்டு பிள்ளைகளையும் ஒருபொருட்டாக கருதாமல் வேறு பெண்களுடன் தவறான தொடர்பில் இருந்து கொண்டு என்னை அடித்து சித்ரவதை செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

          என் கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் பள்ளிக்கூடத்தில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. அதனால் எனது இரண்டு பிள்ளைகளுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குரியாக உள்ளது. நானும் எனது இரண்டு பிள்ளைகளும் வாழவழி செய்து தர வேண்டியது அரசின் கடமைஆகும். @என் கணவரிடம் பெரியோர்களை வைத்து பேசினால் அனாதை இல்லத்தில் போய் சேர்ந்துகொள் என்று சொல்கிறார். எனது 30பவுன் நகைகளை கொடுத்தால் கூட அதை வைத்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியும். என்னுடைய நகையையும் தர மறுத்து கொலை மிரட்டல் செய்து கண்மூடித்தனமாக உயிர்போகும் அளவுக்கு என்னை அடித்து சித்ரவதை செய்கிறார். அடித்ததில் எனது காதுகேட்கும் திறனை பாதியாக இழந்துவிட்டேன். எனது உடலும் மெலிந்துவிட்டது.

          எனவே உயர் அதிகாரிகள் சமூகம் அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது 30பவுன் நகையை பெற்றுதருமாறும், நானும் எனது இரண்டு குழந்தைகளும் வாழவழிவகை செய்தும், எனது பிள்ளைகளை படிக்க வைக்க ஆவன செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என ஜெயவீர தேவி தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.