திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டியில் பாலம் கட்ட பல்லம் தோண்டி பல மாதங்களாக கிடப்பில் போடபட்டதில் போக்குவரத்து சிக்கல்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி இருந்து வேலன்சேர்வைகாரன்பட்டி செல்லும் தார் சாலையில் இருந்த பாலத்தை இடித்துள்ளனர். மேலும் மாற்றுப்பாதை போடாமல் பள்ளம் தோண்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.பண்ணைப்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை என கூறுகின்றனர்.
இது குறித்து செய்தியார்கள் பண்னைப்பட்டி ஊராட்சி கிளர்க் கிடம் விளக்கம் கேட்டபோது உங்களுக்கு நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும், பாலம் வேளை எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எதுவானாலும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கேட்டுக்கோங்க என்னா B.D.O தான் காண்ட்ராக்டர் ரவி கிட்ட பாலம் கட்டும் பணிய கொடுத்தாங்க அதனால இந்த கேள்வி ஏங்கிட்ட கேட்காதிங்க என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்.
பல மாதங்களாக இந்த பல்லம் தோண்டப்பட்டு கிடப்பிப் போடப்பட்டதால் பொதுமக்கள் போக்குவரத்து மிகவும் சிரமத்துக்குள்ளாய் இருப்பது குறிப்பிடதக்கது
செய்தி: பிரபாகரன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.