மாவட்ட செய்திகள்

தேனி அகில இந்திய கட்டுனர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

அகில இந்திய கட்டுனர் சங்கம் தேனி மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

          தேனியில் அகிலக் இந்திய கட்டுனர் சங்க தேனி மையத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 26.5.2026 அன்று தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. @விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பில்டர்ஸ் அசோசியேசன் மாநில சேர்மன் ராமலிங்கம், முன்னாள் மாநில சேர்மன் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

          விழாவின் போது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது. இதில் தேனி மைய சேர்மனாக தண்டபாணி, செயலாளராக அமிதாப்பச்சன், பொருளாளராக அந்தோணி, துணைச் சேர்மனாக சின்னராஜா, இணைச் செயலாளராக சிராஜுதீன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

          விழாவில் தொழிலதிபர்கள் முத்து கோவிந்தன் (KMC), சர்வேஸ்ராஜா, வசந்த், மனோகரன், பாண்டியராஜ், கிளாசிக் மணி, அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நவ்சாத், விசாகன், அமிதாப்பச்சன் உள்பட தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மைய புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.