விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வரவேற்கத்தக்கது எர்ணாவூர் நாராயணன்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கடந்த மார்ச் 9ஆம் தேதி பள்ளி மாணவி தனது வீட்டினருகே உள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த நிலையில் சிசிடி காட்சிகள் அடிப்படையில் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
குற்றம் நடைபெற்றதில் இருந்து 76 நாட்களில் உரிய ஆதாரங்கள் பல்வேறு சாட்சிகள் அடிப்படையில் நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இரண்டே மாதங்களில் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனையை தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தண்டனையை அறிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் இதுபோன்று வழக்குகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடித்து அதிகபட்சத்தை தண்டனை பெற்று தந்தால் மட்டுமே இந்த மாதிரியான கொடுஞ்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு அதிகபட்சத்தை தண்டனை பெற்று தந்துள்ளனர் இந்த தீர்ப்புக்கு சமத்துவ மக்கள் கழகம் வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறது என எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
செய்தி: அருஞ்சுனை
கருத்துகள் (0)
Be the first to comment on this article.