மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் டிரைவரை அடித்து கொலை செய்த தந்தை,மகன்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் தனியார் கல்லூரி டிரைவர் அடித்து கொலை செய்த தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது

       திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி, ரெட்டியார்பட்டி சுடுகாடு அருகே அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி(55) என்பவர் அடித்து முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். @இதுகுறித்து கன்னிவாடி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த காசிராஜா மனைவி மருதாயிக்கும், பாலசுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளத தெரியவந்தது. இதை காசிராஜா மற்றும் மகன்கள் பலமுறை கண்டித்தும் இவர்களுடைய பழக்கம் தொடர்ந்து வந்துள்ளது இந்நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்ரமணி வீட்டில் இருவரும் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

      இதனை தொடர்ந்து காசிராஜா(47), மகன்கள் மனோஜ்குமார்(21), சஞ்சய்(19), உறவினர் ஜானகிராமன்(25) ஆகியோர் பேசுவதற்காக அங்குள்ள மயான பகுதிக்கு அழைத்து சென்று கம்பியாலும் கல்லாலும் தாக்கி கொலை செய்தனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.