தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரம் தேவாரம் சாலையில் முறிந்து விழும் நிலையில் இரும்பு மின்கம்பம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தேவாரம் மெயின் ரோட்டில் தனியார் வங்கி எதிரில் நீதிமன்றம் செல்லும் சாலையில் உள்ள மின் இரும்பு போஸ்ட் துரு பிடித்து காணப்படுகிறது. முறிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பம் முறிந்து சாய்ந்தால் பல உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அவ்வழியே தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள், குழந்தைகள் அதிகமானோர் செல்லும் சாலையாக அமைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தை மாற்றி அமைத்து பொதுமக்களும், குழந்தைகளும் அச்சமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மற்றும் தேனி மாவட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.