புகார் செய்திகள்

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு வைத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு வைத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார்

       தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்றத்தலைவர் V.P.A.மிதுன்சக்கரவர்த்தி மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு வைத்து பொது வெளியில் அவதூறு பரப்பியது மற்றும் மிரட்டியும் பிரிவினரிடையே அரசு பணியாளர்கள் பழனிசெட்டிபட்டி பொதுமக்கள் மற்றும் பிற கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாதவன் என்பவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார்மனு அளித்துள்ளார்.

      அந்த மனுவில் தான் தேனி பழனிசெட்டிபட்டி மன்றத் தலைவராக உள்ளதாகவும் அவரது பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி பேரூராட்சிக்கு பல வகையான நலத்திட்ட உதவிகளையும் குறிப்பாக முதியோருக்கு இலவச ஆட்டோ பயணம் மருத்துவ முகாம்கள். மக்கள் சேவை மையம் மூலம் அரசு சேவைகளை இலவசமாக பெற்றுத்தருதல் போன்ற சேவையும்,

       மேலும் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் (RO Plant) விநியோகம் போன்ற பல நலத்திட்டங்கள் மூலம் மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றவராகத் திகழ்வதாகவும் அவர் சட்ட விரோத நடவடிக்கைகள், சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோர் மீது சட்டப்படியான நடவடிககைகளை துணிந்து எடுத்து வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

       இந்நிலையில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியைச் சார்ந்த சிவக்குமார் மகன்கள் வினோத்குமார், கண்ணதாசன் ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக தெருவினை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். அந்த ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்கு முறையாக நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று அனைத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் ஒரே மாதிரியான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

       இந்நிலையில் வினோத்குமார் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் தங்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் துறையினரையும் பல்வேறு குண்டர்கள் மற்றும் அரசியல் கட்சியிரைச் சார்ந்தோரைக் கொண்டு மிரட்டி வருகின்றனர்.

      மேற்படி நபர்கள் மீது பல புகார்கள் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.இந்திலையில் கடந்த 03.08.2026 அன்று நீதிமன்ற உத்தரவின் பழனிசெட்டிப்ட்டி சுகதேய் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், மேற்படி ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுக்கும் நோக்கில் பல குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட இராயப்பன்பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி மற்றும் சின்னமனூரைச் சேர்ந்த நபர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னையும் பணியில் இருந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

        மேலும், எங்கள் பேரூராட்சி மன்றத்தலைவர் இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத நிலையில் 03.08.2026 அன்று இராயப்பன்பட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தலைமையில் பல ஊடகங்களைக் கூட்டி ஏதோ பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் V.P.A.மிதுன்சக்கரவர்த்தி அரசு ஆவணங்களை போலியாக மாற்றிவிட்டார் எனவும், சட்டத்திற்கு புறம்பாக அரசியல் பழிவாங்கம் நோக்குடன் செயல்படுகிறார் என்றும் தி.மு.க வைச்சோர்ந்த சேர்மன் இவர்களை பழிவாங்குகிறார் எனவும் குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பாக கூறியுள்ளார்.

       எனவே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியல் தொடர்ந்து குண்டர் மற்றும் அரசியல் வாதிகளை வைத்துக்கொண்டு பொது மக்கள் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பணியாளர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் விடுத்தும், பேரூராட்சி மன்றத்தலைவருக்கு எதிராக உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொது வெளியில் கூறி அவரின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும், பழனிசெட்டிபட்டி பொது மக்களிடையே கட்சி பெயரினை குறிப்பிட்டு பகையை உணர்வினை ஊட்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட நபர்கள் மீதும் அவர்களுடன் வந்த 100-க்கும் மேற்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் எந்த வித அசம்பாவிதம் நடந்து விடாமல் காத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாதவன் என்பவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் பூகார் அளித்துள்ளார்

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.