புகார் செய்திகள்

தேனி அறிவுசார் மையத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மாணவர்கள் கோரிக்கை

தேனி அறிவுசார் மையத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மாணவர்கள் கோரிக்கை

         தேனி அறிவுசார் மையத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர மாணவர்கள் கோரிக்கை

        வேலைவாய்ப்பு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், மரத்தடி நிழல்கள் போன்ற பல்வேறு இடங்களில் அமர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு அறிவுசார் மையத்திற்கு நாளுக்கு நாள் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், மாணவர்களுக்காக வழங்கப்பட்ட நாற்காலிகளில் மேலாளர் அமர்ந்து கொண்டு, தனது நாற்காலியை பயன்படுத்தாமல் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

       இதுகுறித்து மாணவர்கள் கேட்டபோது வெப்பமாக உள்ளது எனக்கு இரண்டு நாற்காலிகள் வேண்டும் என்று கூறுகின்றனர் மாணவர்கள்.

         மேலும் அறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலையில், போதுமான காற்றோட்ட வசதி இல்லை என்றும் அறையில் உள்ள சாளரங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள கண்ணாடி வழியாக சூரிய வெப்பம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பலமுறை நேரடியாக எடுத்துக் கூறியும், மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்,

        தினமும் 200-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் மையத்தில் ஒரே ஒரு RO இயந்திரம் மட்டுமே இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. RO இயந்திரத்தின் வடிகட்டியை மாற்று வதற்க்கான செலவையும் மாணவர்களே தங்களது சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

        கழிவறைகளில் ஒரு குப்பைத்தொட்டி (Dustbin) கூட இல்லாத நிலை காணப்படுகிறது. கழிவறைகளின் குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

         எனவே, தேனி அறிவுசார் மையத்திற்கு வரும் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு, மேற்கண்ட குறைகளை உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.