திண்டுக்கல் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்ட பட்டியல் இன இளைஞர் ராமருக்கு நீதி கேட்டு உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம்
கொடைக்கானல் பூம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமர் கொலைக்கு நீதி கோரி உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது தீண்டாமை ஒழிப்பு தலைவர்கள் முத்துராணி கே.டி .கலைச்செல்வன் ஆர் வனஜா மாதர் சங்க மாவட்ட தலைவர்கள் பாக்கியம் பாப்பாத்தி ஜீவா நந்தினி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய் கோஸ் மாநகர செயலாளர் அரபு முகமது மாவட்ட குழு உறுப்பினர் கே எஸ் கணேசன் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நிரூபன் தீபக் ராஜ் மற்றும் தமிழர் சமூக நீதிக் கழகத்தின் தலைவர்கள் சுரா தங்கபாண்டியன் சரவணவேல் மலையாள ராஜா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் கொலை செய்யப்பட்ட ராமரின் குடும்பத்தை சேர்ந்த தந்தை வடிவேல் தாய் நாகம்மாள் மனைவி புவனேஸ்வரி போராட்டத்தில் கலந்து கொண்டனர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.