மாவட்ட செய்திகள்

தேனி பிசி பட்டியில் சாதி ஒழிப்பு போராளி தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி நகர துணை செயலாளர் கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

தேனி பிசி பட்டியில் சாதி ஒழிப்பு போராளி தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி நகர துணை செயலாளர் கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

        ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் சாதி ஒழிப்பு போராளி தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி நகர துணை செயலாளர் தேனி கணேசன் நினைவு நாளான இன்று அன்னாரது திரு உருவ படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் வீரவணக்க முழக்கம் நிகழ்ச்சி பழனிசெட்டி பட்டி உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது

        இந்நிகழ்ச்சி தேனி (தெற்கு) மாவட்ட செயலாளர் தேனி மதுரைவீரன், வீரபாண்டியன் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் பாலா( எ) தமிழரசு தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர், ஈஸ்வரன் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட துணை செயலாளர், ஜெகதீஷ் குமார் தெற்கு மாவட்ட தலைவர் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், மணிகண்டன் பெரியகுளம் பொறுப்பாளர், மணிமாறன் போடி ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், அழகுராஜா வடபுதுபட்டி பொறுப்பாளர் தமிழ்ப் புலிகள் கட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.