மாவட்ட செய்திகள்

தேனியில் இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது !!!

தேனியில் இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது !!!

       தேனி மாவட்டம் தேனியில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராகச் சமரசமின்றி குரல் கொடுக்கவும் இளைய தலைமுறை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் மற்றும் இயக்கம் 23.07.26 அன்று துவங்கப்பட்டது.

        கடந்த 14 ஆண்டுகளாக இளைய தலைமுறை அறக்கட்டளையின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

       இந்தத் தொடக்க விழாவிற்கு இயக்கத்தின் தலைவர் M.K.மருததுரை அவர்கள் தலைமை வகித்தார், துணை தலைவர் V.பாலச்சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர், S.முருகானந்தம் அவர்கள் முன்னிலை வகித்தனர், துணைப் பொதுச்செயலாளர், K.விமல் குமார், பொருளாளர்கள் K.ஜீவநாத்,B.சக்தி, இணை பொது செயலாளர்கள் R.சக்திவேல், C.சத்தீஸ்வரன்,M.K.வேல்முருகன், V.வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

          இயக்கத்தின் முக்கியக் கொள்கைகள் மற்றும் முழக்கமாக வீரம், விவேகம், வெற்றி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த இயக்கம் செயல்படும் என்றும், ##முக்கியப் பணிகளாக

         இயற்கை வள பாதுகாப்பு, பத்திரிகையாளர் பாதுகாப்பு, வணிகர் நலன் மற்றும் பாதுகாப்பு, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம், பெண்கள் பாதுகாப்பு,போதை ஒழிப்பு, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு குறித்து வழிகாட்டுதல் ஆகியவை இக் கூட்டத்தின் மூலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

        பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் இளைஞர்களை முழுமையாக ஈடுபடுத்தி, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அரனாகத் திகழும் வகையில் அரசியல் மற்றும் கொள்கைப் பரப்புரைப் பிரிவு, பத்திரிகையாளர் மற்றும் ஊடகப் பாதுகாப்புப் பிரிவு, வணிகர் நலப் பிரிவு, லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு உள்பட 26 சிறப்புப் பிரிவுகள் இந்த இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

        நிகழ்ச்சியின் இறுதியில் புதிதாகப் பொறுப்பேற்ற மாநில, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு, சமுதாய நலனுக்காக தொடர்ந்து களப்பணியற்றுவோம் என உறுதிமொழியேற்கப்பட்டது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.