தேனியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழைய பஸ் நிலையம் அருகே 23.7.2026 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் செல்வேந்திரன், தேவகுமார், விஜயகுமார், ஜெய முருகன், மணிகண்டன் உள்பட கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாரத தேசத்தின் பொது அமைதியையும், வளர்ச்சியையும் பொறுத்து கொள்ளாத அன்னிய கைக்கூலிகளின் தூண்டுதலில் அமைதியை சீர்குலைக்க முயலும் தேச விரோத சக்திகளை கண்டித்தும், பாரத பிரதமர் அவர்களுடைய இல்லத்தினை முற்றுகையிட முயன்ற பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் (காங்கிரஸ்) ராகுல் காந்தியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.