கழகத்தின் கொள்கைத் தலைவர் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய போடி நகர த.வெ.க வினர்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், கல்விக் கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, போடி நகரம் சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும், போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
செய்தி: தினேஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.