மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட வணிகர்கள் சங்கத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தினர்

தேனி மாவட்ட வணிகர்கள் சங்கத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தினர்

         தேனி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் திரு.செல்வகுமார் அவர்களையும் அவரோடு இணைந்து செயல்படக்கூடிய வணிகர்கள் சங்க நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எம் நாராயண ராஜா தேனி மாவட்ட இணைச் செயலாளர் ஆர் மகேந்திர பாண்டி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பில் வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்தும் அரசாங்கத்திலிருந்து வணிகர்களுக்கு வரக்கூடிய நெருக்கடிகள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்தும் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் குறித்தும் கலந்துரையாடினர்.

         மேலும் செய்தியாளர்கள் பணி, அர்ப்பணிப்பு, பொதுமக்கள் தொண்டும், வணிகர்கள் சங்கத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், வாணிபத்தின் வளர்ச்சியில் செய்தியாளர்களின் பங்கீடு குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

         இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் மாவட்ட இணை செயலாளர் இருவருக்கும் வணிகர்கள் சங்கத்தினர் சால்வை அணிவித்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.