புகார் செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சியில் சார்பாக புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதை கைவிட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சார்பாக புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதை கைவிட வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு

          புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் பொதுமக்களுக்கு பயனில்லாத தொற்றுநோய் ஏற்படுத்தும் இடமாகவும் கட்டிடம் கட்டினால் விபத்தை ஏற்படுத்தும் இடமாகவும் உள்ளது அரசின் நிதியையும் வீண் செய்யாமல் தற்போது அமைய உள்ள பேருந்து நிலையம் இடத்தை கைவிட வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேட்டி

       திண்டுக்கல் மாநகராட்சியில் சார்பாக புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது

         பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்தவுடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

           இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நகரை சேர்ந்த பழனி முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் இந்நிலையில் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக சமூக ஆர்வலர் பழனி முத்துக்குமார் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் ஆகியோர் நேரடியாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு வழக்கறிஞர் மோகன் மற்றும் அவருடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சசிகுமார், அரவிந்தன் சல்மான் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்

         திண்டுக்கல் மாநகராட்சி அவசர கதியில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது புதிய பேருந்து நிலையம் அழைப்பதாக அறிவித்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது

        இந்தப் பகுதி பேருந்து நிலையத்துக்கு உகந்த பகுதி அல்ல இதனால் அரசின் பணத்தை மாநகராட்சி வீண் செய்து வருகிறது நூறு வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்கள் குளங்கள் போல் தேங்கி உள்ளதால் இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர்களில் பல்வேறு கெமிக்கல் மற்றும் சுண்ணாம்புகள் கலந்து வருவதால் பேருந்து பயணிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும்

         சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது பேருந்து நிலையம் அமைத்தால் பேருந்து பயணிகள் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாது

         மேலும் பேருந்து நிலையம் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டினால் கட்டிடங்கள் குறிப்பிட்ட காலத்தில் முற்றிலும் பழுதாகி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இப்பகுதி உள்ளது

        மேலும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதி அரசர்கள் சீனி கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதி அரசர்கள் வரும் 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இருவரும் நேரடியாக சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்

         அதேபோல் பொதுமக்களுக்கு புற்றுநோயையும் விபத்தையும் ஏற்படுத்தக்கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாநகராட்சி கைவிட வேண்டும் மக்களின் பணம் 65 கோடி ரூபாயை வீண் செய்யக்கூடாது

         நீதிமன்றத்தில் நாங்கள் உரிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகன் கூறியுள்ளார்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.