புகார் செய்திகள்

தேனி மாவட்டம் - சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் தேனி அல்லிநகரம் நகராட்சி !!!!

தேனி மாவட்டம் - சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் தேனி அல்லிநகரம் நகராட்சி !!!!

           தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகர் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய வீதிகளிலும் குப்பைகள் அல்ல படாமல் குவியலாக காட்சியளிப்பது மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசும் நிலையிலும், சுகாதாரக் கேடு விளைவிக்கும் நிலையிலும் உள்ளது. 

        தேனியில் முக்கிய பகுதியான 19வது வார்டு வ உ சி தெரு சம்மதர்மபுரம் பகுதிகளில் குப்பைகள் பல வாரங்களாக அப்புறப்படுத்தாமல் அழுகிய நிலையிலும் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் காணப்பட்டு வருகிறது. பல நாட்களாக குப்பைகள் அல்லப்படாமல் கிளப்பில் போடப்பட்டதால் நாய்களின் கூடாரமாக குப்பைமேடுகள் காணப்பட்டு வருகிறது. 

        மேலும் வ உ சி தெரு பகுதிகளில் உள்ள பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் இந்த துர்நாற்றத்திற்கு மத்தியில் பள்ளிக்கு செல்லக்கூடிய நிலையிலும் நாய்களின் கூடாரங்களாக காணப்படுவதால் நாய்களிடம் கடிவாங்கும் நிலையிலும் அந்த குப்பை மேட்டு பகுதி அமைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ##மேலும் வ உ சி தெருவில் வயது முதிர்ந்த தென்னை மரங்கள் உள்ளதால் அவ்வப்போது மட்டைகள் பள்ளி குழந்தைகள் மீது விழுவதாகவும், அங்க நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது விழுந்து சேதம் ஏற்படுத்துவதாகவும் 19வாடில் குடியிருந்து வரும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

         இது சம்பந்தமாக தேனி நகர திமுகவில் முக்கிய தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய 19 வது வார்டு கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும், சுகாதார ஆய்வாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

         அதுமட்டுமல்லாமல் அதே தெருவில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உயர்மட்ட தண்ணீர் தொட்டி சிதலம் அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது இந்த தண்ணீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மேல் விழும் நிலையில் உள்ளது.

         இந்நிலையில் குப்பைகள் இருக்கக்கூடிய பகுதியில் வசித்து வரும் பச்சிளம் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த பகுதியில் பல சிறுவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

        எனவே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகமும் குப்பைகளை அகற்றி சுகாதாரத் கேட்டில் இருந்து பொதுமக்களை பாதுகாத்த, மேல்நிலைத் தொட்டியால் ஏற்படக்கூடிய விபத்தில் இருந்தும் தென்னை மரத்தால் ஏற்படக்கூடிய விபத்தில் இருந்தும் தங்களை பாதுகாத்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.