புகார் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் மோர் ஸ்ரீராமபுரத்தில் மிளகாய் தயாரிப்பு மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்து விவசாயம் பாதிப்பதாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் மோர் ஸ்ரீராமபுரத்தில் மிளகாய் தயாரிப்பு மூலம் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்து விவசாயம் பாதிப்பதாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

          திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமபுரம் .அரச மரத்துப்பட்டி.கரிய கவுண்டன் புதூர்.திருமலை நாயர் புரம்.குள்ளம்பட்டி.கரி படம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் ஒரு பகுதியில் மோர் மிளகாய் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் கழிவுகளை கொண்டு வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ##மோர் மிளகாய் கழிவு மற்றும் உப்பு கழிவு நீர் வெளியேற்றம் காரணமாக நிலத்தடி நீர், விவசாயம் நிலங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும்

        பொதுமக்கள்களுக்கு யானைக்கால் வியாதி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும்           

               குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கால்நடைகளும் நோய் தொற்றால் பாதிப்பு அடைவதாகவும் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட தற்போது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்தினர் 150 ரூபாய் வரை தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதாகும் கூலி தொழிலுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளத்தை வாங்கி 150 ரூபாய் செலவு செய்து எப்படி குடும்பத்தை நடத்துவது

            மேலும் நிலத்தடி நீர் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவிற்க்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயம் முழுவதும் அழிந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

         பலமுறை மோர் மிளகாய் தொழிலை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால்

         தற்போது பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக தங்களது வேலைகளை விட்டுவிட்டு வந்துள்ளோம்

          தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.