புகார் செய்திகள்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் கருத்தடை செய்த தெரு நாய்களின் நிலை என்ன???

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் கருத்தடை செய்த தெரு நாய்களின் நிலை என்ன???

          தேனி நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் நாட்டு தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பாக ஆண் நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்துவதற்காக தெருக்களிலும் வீடுகளிலும் வளர்த்து வரும் நாட்டு நாய்களை தேனி அல்லிநகரம் நகராட்சி ஊழியர்கள் வலைவீசி பிடித்துச் சென்று தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனை கருத்தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு மருத்துவர் மூலம் கருத்தடை ஊசி போடப்பட்டும்.

         அப்படி அடைத்து வைக்கப்பட்ட நாய்களுக்கு உணவு, குடிநீர் என அனைத்தும் வழங்கப்பட்டு நாள் முழுவதும் பராமரிக்கப்பட்டு மீண்டும் பிடித்த இடத்தில் விட்டு விட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

            இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் தெரு நாய்கள் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் வீடுகளில் வளர்த்து வர கூடிய நாட்டு நாய்களை நாய் உரிமையாளர்களிடம் நாங்கள் கருதடை செய்து மீண்டும் தங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி பிடித்துச்சென்று திரும்ப ஒப்படைப்பதில்லை என கூறுகின்றனர் நாய்களின் உரிமையாளர்கள்.

           இது தொடர்பாக நாமும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு பலரது நாய்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு உண்ண உணவில் இல்லாலும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் பரிதாபமான நிலையில் இருந்தது தெரியவந்தது, இது சம்பந்தமாக அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் நம்மிடம் புகாராக, அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து வந்து அடைத்து வைத்து உணவு இல்லாமல் பட்டினியாக அடைத்து வைப்பதாக கூறுகின்றனர். ##மேலும் இது குறித்து நகராட்சி நிர்வாக அலுவலரிடம் நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது தெருநாய்களை மட்டுமே தாங்கள் பிடித்து வருவதாகவும் அப்படி பிடித்து வந்த நாய்களை ஊசி போட்ட அடுத்த நாள் அவிழ்த்து விடுவதாகவும் கூறினார். இது உண்மைதானா என்ற நிலையை தெரிந்து கொள்ள கால்நடை மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய நகராட்சி ஊழியர்களை விசாரித்த போது பிடித்து வருவது உண்மைதான் ஊசி போடுவது உண்மைதான் உணவு தண்ணியோ சரியான நேரத்தில் அவைகளுக்கு நாங்கள் கொடுப்பதில்லை பிடித்து வரப்பட்ட நாய்களுக்கு ஊசி போட்ட மறுநாள் எங்காவது ஒரு தெரு ஓரத்தில் அவிழ்த்து விடுவோமே தவிர சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுப்பது இல்லை என்று கூறினர்.

           நகரத்தை நாய்களிடமிருந்து பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் கருத்தடை என்ற பெயரில் நாய்களை பிடித்து வந்து உணவு இல்லாமல் பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருவது பல உரிமையாளர்கள் மனதில் பல கேள்வி எழுப்பி உள்ளது, நிர்வாகத்தின் அலட்சிய போக்கு நகராட்சி ஊழியர்கள் மத்தியில் முகம் சுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாகவும்,மேலும் உணவுகள் வழங்க நகராட்சி நிர்வாகத்தால் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதா, அப்படி ஒதுக்கப்பட்ட தொகை யாருக்கு உணவாகிறது என்று தெரியவில்லை எனவும் கூறுகின்றனர் நகராட்சி ஊழியர்கள்.

     இது குறித்து சுகாதார ஆய்வாளரிடம் 98841 90562 என்ற அழைபேசி என்னில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது நாயை எல்லாம் நான் பார்க முடியாமா எனக்கு இதுதானா வேளை என்று விளக்கம் கூறினார்

செய்தி G.ராஜா - தலைமை நிருபர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.