விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நீதிமன்ற சிரஸ்தாரர் பணி நிறைவு பாராட்டு விழா.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிரஸ்தாரராக 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய திருமதி சுபாஷினி அவர்கள் பணி ஓய்வு பெற்றார். இவ்விழாவில் அந்த நீதிமன்ற மாவட்ட நீதிபதி திருமதி புஷ்பராணி அவர்கள் தலைமை தாங்கி பணி நிறைவு பெற்ற ஊழியரை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் விருதுநகர் மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருப்பதி, பொருளாளர் வெங்கடேசன், துணை தலைவர் கண்ணன், மாநில துணை தலைவர் சௌந்தரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் மாசிலாமணி மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்ற சிரஸ்தாரர் ரமேஷ் மற்றும் பல நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பாராட்டி பேசி கௌரவித்தனர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.