திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நடராஜ நாட்டியாலயாவின் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா நடைபெற்றது
ஒட்டன்சத்திரம் நடராஜ நாட்டியாலயா நடனப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மாணவிகளின் முதல் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்று வரும் நடராஜ நாட்டியாலயா இசை மற்றும் நடனப்பள்ளியின் சலங்கை பூஜை விழா மற்றும் மாணவிகளின் அரங்கேற்றம் நிகழ்ச்சி குழந்தை வேலப்பர் கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடராஜ நாட்டியாலயா நடப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மாணவிகளின் காலில் அணியும் சலங்கைகளுக்கு பூஜை மற்றும் சிறப்பு செய்யப்பட்டு மாணவிகளின் காலில் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவிகளின் முதல் அரங்கேற்றம் சிறப்பாக நடந்து முடிந்தது.
மேலும் இந்நிகழ்வில் நடனப்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவிகளின் பரதநாட்டிய கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்
செய்தி: வேலுச்சாமி
கருத்துகள் (0)
Be the first to comment on this article.