மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நகர் வடக்கு காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார்

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நகர் வடக்கு காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார்

           திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களிடம் திமுக திண்டுக்கல் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி மாவட்ட துணை செயலாளர் பிலால், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர்கள் ஹரிராம், குமரேசன், மது சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் ஹசாலி, குணசேகரன் உள்ளிட்டோர் ##திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் மீது புகார் மனு அளித்தனர்.

          அந்த மனுவில்  நேற்று திண்டுக்கல்லில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் எங்கள் தலைவரைப் பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியும், இரு கட்சியினரிடையே வன்முறை தூண்டும் விதமாகவும் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.