திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம்பட்டி கருப்பணசாமி கோவிலில் த.வெ.க நிர்வாகிகள் பொங்கல் வைத்து கிடா வெட்டி கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முத்தனம்பட்டியில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவிலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக, ரெட்டியார்சத்திரம் த.வெ.க மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் கிருஷ்ணன் தலைமையில் கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்வும் நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் த.வெ.க கிழக்கு மாவட்ட செயலாளர் தேவா முன்னிலை வகித்து முத்தனம்பட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியில் த.வெ.க வைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.