கொடைக்கானலில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்த மகளிர் போலீசார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் அருள் பிரகாஷ் வயது 27 கடந்த வாரத்தில் அருள் பிரகாசின் மனைவியின் அக்கா மகளை (பதினோராம் வகுப்பு பள்ளி மாணவி) உணவு வாங்கித் தருவதாக வெளியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது ,
இந்த நிலையில் கொடைக்கானல் ஏரி பகுதியில் உணவு வாங்கி கொடுத்து சிறுமியிடம் வா உன்னை சிட்டி யூ பகுதிக்கு அழைத்து செல்கிறேன் அங்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்று அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பதினோராம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்,
அதனைத் தொடர்ந்து இதனை தெரிந்த பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோர் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர், அதனைத் தொடர்ந்து மகளிர் போலீசார் அருண் பிரகாஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ##கொடைக்கானலில் சித்தப்பா உறவுமுறை உள்ள நபர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.