தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்டத்தில் தாயாருக்கு த.வெ.க புதிய தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில், போடி நகரக் கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னிலையில், வாழ்வாதாரத்திற்காக கம்மங்கூழ் விற்பனை செய்து வரும் தாயாருக்கு புதிய தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போடி நகர 11-வது வார்டு செயலாளர் கவுரி சங்கர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புதிய தள்ளுவண்டி அத்தாயாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலப் பணிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பயனாளி தாயார், தமது வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக அமைந்த இந்த உதவிக்காக கழக நிர்வாகிகளுக்கும், குறிப்பாக 11-வது வார்டு செயலாளர் கவுரி சங்கர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்
செய்தி: தினேஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.