அரசியல்

West Bengal Ex-CM Mamtha banerji was not ready to Resign the post

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் படுதோல்வியைச் சந்தித்து நிலைகுலைந்துள்ள சூழலில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், தேர்தல் ஆணையத்தின் துணையோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சாடினார். "நாங்கள் தோற்கவில்லை" என்று ஆவேசமாக முழங்கிய மம்தா, தனது அரசியல் வாழ்நாளில் இவ்வளவு மோசமான மற்றும் அருவருக்கத்தக்க ஒரு தேர்தலைச் சந்தித்ததே இல்லை என்றும், ராஜினாமா கடிதத்தை வழங்கத் தான் ஆளுநர் மாளிகைக்குச் செல்லப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் செய்தி : ஆசிரியர் & வெளியீட்டாளர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.