புகார் செய்திகள்

ஒட்டன்சத்திரம் விவசாய நிலத்தை UDR மூலம் போலி பட்டா வாங்கிக்கொண்டு அதிகாரிகள் மூலம் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

ஒட்டன்சத்திரம் அருகே 38 வருடங்களாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தை UDR மூலம் போலி பட்டா வாங்கிக்கொண்டு அதிகாரிகள் மூலம் மிரட்டும் நபர்களையும் ..நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கோரிக்கை

      திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் வீரப்பன் கவுண்டர் இவர் 1988ம் ஆண்டு மூன்று ஏக்கர் 40 சென்ட் நிலத்தை கிரையத்திற்கு பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விலைக்கி வாங்கி தற்போது வரை விவசாயம் செய்து வீடு கட்டி குடியிருந்தும் வருகிறார் 

       இதே போல் அருகில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதே பகுதியில் கடந்த 40 வருடங்களாக விவசாய நிலத்தை விலைக்கி வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்

          விவசாய நிலத்திற்கு சம்பந்தமில்லாத கோபால் என்பவர் அரசு அதிகாரிகளை தன் வசப்படுத்தி UDR பட்டா வாங்கிக்கொண்டு தொடர்ந்து 30 வருடங்களாக பிரச்சனை செய்து வருவதாகவும் ##தங்களும் கிராம நிர்வாக அதிகாரி வருவாய்த்துறை வட்டாட்சியர் பழனி துணை ஆட்சியர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் வரை தொடர்ந்து புகார் மனுக்கள் அளித்தாலும்

         புகார் மனுக்களை விசாரிக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்கள் எங்களிடம் உள்ள ஆவணங்களையும் அதேபோல் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பையும் ஏற்காமல் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்

           40 வருடங்களுக்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறோம் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலத்தை பதிவு செய்து பட்டா வாங்கி குடியிருந்து வரும் நிலையில்

         இடத்திற்கு சம்பந்தமில்லாதவர்க்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் எப்பொழுது கேட்டாலும் உங்களது புகார் விசாரணையில் உள்ளது என்று கூறுகின்றனர் ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை தமிழகத்திற்கு எந்தெந்த முதல்வர்கள் வெற்றி பெற்று வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் புகார் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

         தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கும் புகார் மனு அனுப்பி இருந்தோம் அந்த மனு குறித்து பழனி ஆர்டிஓ எங்களுக்கு தபால் ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் உங்களது பிரச்சனை குறித்து உரிமையியல் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்

          நாங்கள் வாங்கிய இடத்திற்கு அனைத்து ஆவணங்களும் உள்ளது அதேபோல் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன் மூலம் 14 நபர்களுக்கு பிரிக்கப்பட்டு அதிலிருந்து தான் தற்போது விவசாயம் செய்து வரும் அனைவரும் வாங்கியுள்ளோம்

         ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு அரசால் வழங்கப்பட்ட UDR பட்டா உள்ளது அதைக் காப்பாற்ற வேண்டும் மேலும் அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் செயல்படுவதாகவும் தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு உரிய முறையில் விசாரணை செய்து எங்களது சொத்தை மீட்டுத் தர வேண்டும். விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.