கோவில்

theni news

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா ராட்டினம் அமைக்க பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினத்திற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் இடத்திலும் உணவு கூடங்கள் அமைக்கும் இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 இன்று வீரபாண்டி கோவில் வாளாகத்தின் தெற்க்கு பகுதியில் நடைபெற்றது. ஏலதாரர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், மற்றும் கிருஷ்ணன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.