கோவில்

Theni district - Sri Mangala Devi Chitirai full moon day festival ...

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மங்கலதேவி கண்ணகி கோயில் முழு நிலவு சித்திரை திருவிழா...

தேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நேற்று 01.05.2026 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டம் பளியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மருத்துவ கூடாரங்கள் அமைத்து, மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது, சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதி, போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், வாகன நெரிசலை ஒழுங்கு படுத்துவதற்காகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் ஏராளமான ஆண், பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரு மாநில வனத்துறையினர் வன விலங்குகளால் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாமல் பாதுகாப்பு செய்திருந்தனர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.