அரசியல்

Hearty wishes to Our New Honourable chief minister C.Joseph Vijay - Reporters

செய்தியாளர்கள் சார்பாக தமிழக முதல்வர் மாண்பு மிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்து மற்றும் கோரிக்கை

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவருடன் பொறுப்பேற்கும் புதிய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தியாளர்கள் சார்பாக செய்தியாளர் M.ராஜா, K.பிரதீப்,M.பாலகுரு,R.மகேந்திரன், S.மணிகண்டன்,G.ராஜா, Bவிஜயக்குமார்,S.பாலாஜி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

     மேலும் முதல்வர் அவர்களுக்கு செய்தியாளர்கள் சார்பாகவும், செய்தியாளர்கள் சங்கங்களின் சார்பாகவும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக செய்தியாளர்களுக்கு செய்கிறோம் என்று கூறிய திட்டங்களை விஜய் அவர்களும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கைகளாக

  1 ) முந்தய ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் அனைத்து மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு சென்றடையவில்லை என்றும் இனிவரும் காலங்களில் புதிய ஆட்சியாளர்களும் நிர்வாகமும் கொடுக்கக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும் முறையாக பதிவு செய்யப்பட்ட இதழ்களில் பணிபுரியக்கூடிய செய்தியாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் இதனை சரியாக தனி குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும்

   2) செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பின் போது எந்த விதத்தில் தாக்கப்பட்டாலும் தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செய்தியாளர்களின் உயிரையும், உடமையும் காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி செய்தியாளர்களை தாக்கு பவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளிள் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும்

   3) செய்தியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் 4) வீட்டுமனை இல்லாத செய்தியாளர்களுக்கு இரண்டு சென்ட் வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும் காலி வீட்டுமனை வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

        மேலும் விஜய் அவர்கள் அதிகப்படியாக இளைஞர்கள் வாக்கினை பெற்று இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் செய்தியாளர்களாக அதிக எண்ணிக்கையில் பணிபுரிபவர்கள் இளைஞர்கள் என்பதில் இளைஞர்களுக்கு விஜய் செவி சாய்ப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.