தேனி புதிய பேருந்து நிலையம் அருகே முறைகேடாக இயங்கும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி CPI.ML. மாஸ் லைன் தேனி மாவட்ட செயலாளர் வலியுறுத்தல்
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட்) மாஸ் லைன் தேனி மாவட்ட குழு சார்பில், மாவட்ட செயலாளர் ஜோதி பாண்டிகண்ணன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், தேனி புதிய பேருந்து நிலையம் அருகே முறைகேடாக இயங்குவதாகக் கூறப்படும் மனமகிழ் மன்றங்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக் கானோர் அன்றாடம் வந்து செல்லும் தேனி புதிய பேருந்து நிலையம் அருகிலேயே மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இந்த மன்றங்கள் உரிய அரசு அனுமதியுடன் இயங்குகின்றனவா?
சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா?
தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா?
இத்தனை கேள்விகள் எழுந்தும் அதிகாரிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
சட்டத்தை மீறிச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான் நிர்வாகத்தின் கடமை. அதிகாரிகளின் அலட்சியத்தால் சட்டவிதிமீறல்கள் தொடர அனுமதிக்கப்படுகிறதா?
இது என்ன நிர்வாகம்? யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
எனவே, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு, சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்களில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். உரிமம், அனுமதி மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் சட்டவிதிமீறல்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
அதிகாரிகள் கடமை தவற கூடாது. மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்! சம்பந்தப்பட்ட பார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
செய்தி: G.ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.