ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பால நாகம்மாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவை நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து- ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பழமையான ஸ்ரீ பால நாகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி ஒரு வார காலம் விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.முன்னதாக பால நாகம்மாள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு , முளைப்பாரியை நடுவில் வைத்து சுற்றி கும்மி பாடல்கள் பாடி கும்மி அடித்தும், தப்பாட்டம் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டும் பெண்கள் மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து முளைப்பாரியை நகர் பகுதி முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் பாலநாகம்மாள் கோவிலை அடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு பாலநாகம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜையும் தீபாராதனையும் நடைபெற்றது
செய்தி: பாண்டீஸ்வரன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.