திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ௹9.85 இலட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் 2025 - 2026 தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாடி ஊராட்சியில் உள்ள தம்பிநாயக்கன் பாறைப்பட்டியில் ௹9.85 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடையை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் CPIM மாவட்ட செயலாளர் பிரபாகரன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரத்குமார், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.