தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 19.07.2026 அன்று சங்கத்தின் 4ம் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக தேனி மாவட்டத்தில் முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் முதல் நிகழ்வாக தேனி வடபுதுபட்டியில் அமைந்துள்ள life innovation School வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது ##அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள யாழ் கபே ஹாலில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து
4ம் ஆண்டு விழா கொண்டாட்டமாக மாநிலத் தலைவர் K புருஷோத்தமன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தலைவராக P.ரஞ்சித், மாவட்ட செயலாளராக G.ராஜா, மாவட்ட பொருளாளராக M.பால குருசாமி, மாவட்ட இணை செயலாளராக R.மகேந்திர பாண்டி, B.விஜயக்குமார் ஆகியோரும், T.பால்ராஜ் அவர்கள் மதுரை மண்டல அமைப்பாளராகவும், P.சசிகுமார் நிர்வாகக் குழு தலைவராகவும் நியமிக்கப் பட்டார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக R.பாண்டியராஜன், S.பாலாஜி, V.சாமுவேல் ராஜா மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளராக SBM.விக்னேஷ்வரன்,மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக P.சரவணக்குமார் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொருப் பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் K.புருஷோத்தமன்,மாநில பொருளாளர் K.தங்கப்பாண்டி மாநில செயலாளர் M.நாராயண ராஜா, ஆகியோரும்,சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் K.பிரதீப், மாநில தலைமை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் S.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம் நாராயண ராஜா அவர்களது பிறந்தநாளை மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேக் வெட்டி கொண்டாடினர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.