மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் - போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்லில் போதை மாத்திரை, போதை மருந்து விற்பனை செய்த அண்ணன்-தம்பி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் ஜான்சன், பிரபாகரன் மற்றும் காவலர்கள் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது பாறைப்பட்டி சுடுகாடு பகுதியில் பதுங்கி இருந்து போதை மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்த பேகம்பூர், யூசுபியா நகரை சேர்ந்த லத்தீப்மௌலானா(26), மேட்டுப்பட்டியை சேர்ந்த அண்ணன் முகமதுஅலி ஜின்னா(32) தம்பி முகமதுமைதீன்(27) அவர்களிடமிருந்து 12 பாட்டில்கள் போதை மருந்து, 25 போதை மாத்திரைகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.