மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் - தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

        தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் K.புருஷோத்தமன், மாநில பொருளாளர் K.தங்கபாண்டியன், மாநிலச் செயலாளர் M.நாராயண ராஜா ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

         இந்த கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி, சங்கத்தின் செயல்பாடுகள், பத்திரிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு, நலத்திட்டங்கள், என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல் நடைபெற்றது

          மேலும் புதிய மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர். 

          இந்த கூட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.பொறுப்புகள் பெற்றுக் கொண்டஅத்தனை நிர்வாகிகளுக்கும் மாநில தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார் ##அதனைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பாக செய்தியாளர்களுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களுயும், இன்சூரன்ஸ் திட்டமும், வீட்டுமனை பட்டா, அக்ரிகேசன் கார்டு, பஸ் பாஸ் என அனைத்து சலுகைகளையும் பாரபட்சமின்றி PRGI ல் பதிவு செய்யப்பட்ட இதழில் பணிபுரியக்கூடிய அனைத்து செய்தியாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

              இந்த இந்த கூட்டத்தினுக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்திருந்தனர்,நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வேதம் ராஜு மற்றும் வழக்கறிஞர் அங்குசாமி கலந்து கொண்டனர்

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.