மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

ஒட்டன்சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

           திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய, கண்பார்வையற்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் கன்னிவாடி, புதுப்பட்டி, ஒத்தகோவில்பட்டியை சேர்ந்த முருகன் மகன் வினோத்குமார்(31) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

            இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் முயற்சியால் நீதிபதி அவர்கள் வினோத்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.